Wednesday, February 22, 2012

உலகின் முக்கிய தினங்கள்


ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
Thanks For:-http://hiox.org

தமிழ்


முன்னர் குமரிக்கண்டத்தில் (கல் தோன்றி மண் தோன்றா காலம் என்று வர்ணிக்கிற அளவுக்கு பழமையான) உலகின் வேறெங்கிலும் மனித ஒழுக்கப்பண்பாடுகளும், நாகரிகங்களும் தோன்றாத காலத்தில் திடமான அரசமைப்போடும், நீதியான சட்டதிட்டங்களோடும், முன்தீர்த்த முறையான கட்டுமான அறிவோடும், நல்வழிகாட்டி இலக்கியங்களோடும் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மாபெரும் மக்கட்கூட்டம் தமிழ் என்ற தலைப்பின்கீழ் ஒன்றிணைந்து வந்தது. அதை நாடு, தேசியம், இனம், சாதி என எப்படிச் சொன்னாலும் பொருந்தும். அவர்கள் பேசி, இயற்றிவந்த மொழியும் தமிழ் என்றே குறிப்பிடப்பட்டது.

இந்த குமரிக்கண்ட நாகரிகம் இன்றைய ஆய்வாளர்கள் வழக்கில் லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படுகிறது. (உலகிலேயே முதன்முதலாக தோன்றிய, மனித இனத்தின் முன்தோன்றலாகக் கருதப்படும் குரங்கினம் (இன்று முற்றிலும் அழிந்துபோயிற்று) லெமூரியன் என்றே குறிப்பிடப்படுவதை கவனிக்க)

எகிப்தில் கூட்டம் கூட்டமாக திரிந்துகொண்டிருந்த மக்கட்குழுக்களை தன்னுடைய பராக்கிரமத்தால் ஒன்றிணைத்து, முதன்முதலாக அரசமைப்பை உருவாக்கிய ஒரு அயல்நாட்டவனின் பெயர் மன்னன், மென்னன், மெம்னன் என்று எகிப்திய வரலாறு கூறுகிறது. இவனுடைய வழித்தோன்றலாகவே எகிப்திய பேரரசுகள் தோன்றின.

இந்த காலத்தை தமிழ் இலக்கியங்கள்… கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று குறிப்பிடுகின்றன. (ஆனால், இந்திய அரசு தமிழ் பண்பாடு வெறும் 2000 ஆண்டுகளே பழமையானது என்று ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆரியர் வரவிற்கும் பிந்தையதாகும்).

தமிழர் கண்டம் மொத்தத்தில் பெரும்பகுதியை பாண்டிய மன்னனும், மற்ற பகுதிகளை வேற்று சிற்றரசர்கள் ஆண்டுவந்ததாகவும் தெரிகிறது. அந்த காலத்தில் படையெடுப்புகளோ, நாடுபிடிப்புகளோ இருக்கவில்லை.

தமிழர் முன்னர் வாழ்ந்த கண்டம் கடல்கோளினால் பகுதி பகுதியாக அழிக்கப்பட்டது என்று தமிழ் இலக்கியங்கள் விளக்கமாக உரைக்கின்றன. இன்று சுனாமி என்று விளிக்கப்படுகின்ற இந்த (குமரிக்கண்டத்தை விழுங்கிய) கடல்கோள் என்பதைப் பற்றி… இந்திய அரசைத் தவிர, மற்ற எல்லா நிலவியற் ஆய்வுக்களங்களிலும் நமக்கு மிக அதிகமான, வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைக்கின்றன.

உலகையே உலுக்கிய, உலக வரைபடத்தையே முற்றிலும் மாற்றியமைத்த இந்த கடல்கோள் ஆஸ்திரேலியாவின் (Uluru or Ayers Rock என்று அழைக்கப்படுகின்ற) வியத்தகு ஒற்றைப்பாறை தோன்றுவதற்கும், தனிக்கண்டமாக இருந்த குமரிக்கண்டம் துண்டு துண்டாகி மடகாஸ்கர், தென் ஜார்ஜிய மலைத்தொடர்கள் மற்றும் ஆசியாவோடு இந்தியா என்ற நிலப்பகுதி வந்து முட்டிச்சேர்வதற்கும் காரணமாகியது என்று டிஸ்கவரி சேனல் விளக்குகிறது.

மத்திய தடைக்கடல் மற்றும் தெற்காசியாவின் மேற்பகுதிகளில் கடல்கோளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த டைனோசார்கள் மற்றும் பறவைகளின் எலும்பு எச்சங்களைக் கொண்டு, அவ்வகை உயிரினங்கள் செழிப்பான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும், இன்று தரிசாகக் கிடக்கும் அந்த பகுதிகள் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்திருந்தது என்றும், அப்பகுதிக்கு சீனாவின் கீழ்பகுதியிலிருந்து வரும் மாபெரும் பருவக்காற்றை… கடல்கோளினால் புதிதாக, பூதாகரமாக உருவான இமயமலை தடுத்து தன்மீது பனிமலைகளாக ஆக்கிக்கொண்டதால் மழை பொய்த்து அந்த விலங்குகள் அழிந்துபட்டும், அந்த பகுதிகள் தரிசாகவும் போயின என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழ் நாட்டில் முன்னர் காரோதிமம், ஆதிமம் என்று அழைக்கப்பட்ட பழங்கால விலங்குகள் அந்த கடல்கோளுக்குப் பிறகு… இன்று அறவே உலகத்தில் இல்லை என்று கூறப்படுகின்றது.

இவ்வாறாக, பகுதி பகுதியாக அழிந்துபோன குமரிக்கண்டத்தோடு தமிழர்களின் பொருட்செல்வங்களும், இலக்கியச் செல்வங்களும் போயின. உயிர் தப்பிய பாண்டிய மன்னன் எஞ்சியிருந்த… பெயர்ந்து… புதிதாக அமைந்திருந்த இந்திய நிலப்பரப்பின் தென்கோடியில் (இன்றைய மதுரையில்) தன் மக்களோடு தன் அரசை நடத்தலானான். அவனுக்கு வடக்கே ஏற்கனவே சிற்றரசுகளாக வாழ்ந்துகொண்டிருந்த சேர, சோழ, கொங்கு மன்னர்களைப் போல தானும் அரசாண்டான்.

அதன்பின், சோழ மன்னன் தன் படையெடுக்கும் படலத்தைத் தொடங்கவே தமிழ் இனத்தைப் பற்றிய புகழ் மீண்டும் உலகளவில் பரவத் தொடங்கிற்று. கடல்கடந்து கம்போடியாவிலும், தாய்லாந்திலும் தன் தடங்களைப் பதித்த சோழ மன்னன்… ஆரிய முனிவர் ஒருவர் போதகத்தால் கவரப்பட்டு சிவசமயத்தில் மும்முரமாகி, தன் போர்க்கொலைப் பாவங்களைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு, அந்த முனிவரின் வழிகாட்டுதலின்படி, மக்களைக் கொள்ளையிட்டு தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். நிதியம் பலவீனமடைந்த நேரத்தில், ஆந்திரத்தின் விஜய நகரப் பேரரசால் முற்றுகையிடப்பட்டு சோழப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இவ்வாறாக, உலக வரலாற்றில் பல மாபெரும் முத்திரைகளைப் பதித்திருக்கும் தமிழ் இன நாகரிகம்… புதிதைப் பார்த்து ஏமாறும் தன்னுடைய பேதைமையாலும், மதத்தின் பேரால் அநீதியான பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு துணை போனதாலும் ஆரியர்களுக்குக் கீழ்பட்டனர். (இன்று போலவே) மக்களை ஒன்று கூட்டி வழிகாட்டும் சரியான தலைமை இல்லாததால்… ஒரு மாபெரும் இனத்தின், நாகரிகத்தின், அதன் பண்பாட்டின், உலகத்தில் முதற்தோன்றிய யாவற்றின் பெயருமாக இருந்த தமிழ்… வெறும் ஒரு மொழியின் பெயர் என்றும்… தமிழுணர்வு என்பது வெறும் மொழிப்பற்று என்றும் சிறு கூட்டிற்குள் அடைக்கப்பட்டது; சங்கிலியால் பிணைக்கப்பட்டு… தமிழ் மாநிலம் என்ற சிறு அங்கீகாரத்திற்குள்… தன் பெருமையையும், சிறப்பையும், தொன்மையையும் அழித்து மறைத்த இந்தியத்தின் கைகளுக்குள்ளேயே… தம் மக்களின் தற்குறித்தனத்தால் சிறைப்பட்டுப் போனது.



என்றாலும் அவர்களுக்கு என்றேனும் ஒருநாள் தமிழ் தேசியத்தின் உணர்வு வரும்… தமிழ் இனம் பக்தியிலும், பகுத்தறிவிலும், ஒழுக்கத்திலும், நீதியிலும் பக்குவப்பட்ட…. தன் பழமைமிக்க முதிர்ச்சியை தன்னுள் கொண்ட இனம் என்று ஒருநாள் தன் தமிழன் உணரும்போது…. அவன் தலை உயரும் என்று நம்பி இன்னும் குற்றுயிரும் குலையுயிருமாக… பன்றிக் காய்ச்சலின் கிருமிபோல ஆங்காங்கே ஒட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறது தமிழம்….

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

01.சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
02.கழகம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
03.பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
04.மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
05.இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)

உலகின் அதிகம் பேசப்படும் மொழிகள்

01.மாண்டரின் (சீனம்)- சீனா - 885 மில்லியன்
02.ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
03.ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
04.வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
05.ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
06.போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
07.ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
08.ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
09.ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
10.பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
11.வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
12.ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
13.கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
14.வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
15.தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
16.யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
17.மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
18.தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
19.துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
20.உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்

Tuesday, February 21, 2012

உங்களுக்குத் தெரியுமா?

அதிகம் பின்பற்றப்படும் மதங்கள்

  1. கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரடஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
  2. இஸ்லாம் - 110 கோடி
  3. இந்து சமயம் - 105 கோடி
  4. கன்பூசியம் - 40.0 கோடி
  5. பெளத்தம் - 35.0 கோடி
  6. டாவோயிசம் - 5.0 கோடி
  7. ஷிந்தோ - 3.0 கோடி
  8. யூதம் - 1.2 கோடி
  9. சீக்கியம் - 90 இலட்சம்
  10. சமணம் - 60 இலட்சம்
  11. பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
  12. சோறாஸ்ரியனிசம்

சமயங்கள் மற்றும் சமயப்பிரிவுகள்

கீழே தரப்பட்டுள்ள வகைப்படுத்தல், முடியக்கூடிய பல வகை வகைப்படுத்தல்களில் ஒன்று. சில பதிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆபிரகாமிய சமயங்கள்

 தென்னாசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) தோற்றம் பெற்ற சமயங்கள்

கவனிக்க: யோகா என்பது இந்து தத்துவத்தின் ஒரு கிளையென்பதுடன், இந்து சமயத்துள் அடங்கும் பல்வேறு ஆன்மீகச் செயற்பாடுகளையும், நம்பிக்கைகளையும் மொத்தமாகக் குறிப்பதற்கான ஒரு சொல்லாகும்.

பாரசீகச் சமயங்கள்

கிழக்காசியாவில் தோற்றம் கொண்ட சமயங்கள்

ஆபிரிக்க-அமெரிக்க சமயங்கள்

பழங்குடி மக்களின் Pagan நம்பிக்கைகள்

See also: Animism, Goddess Worship, Paganism, Shamanism

தற்காலத்தில் தோற்றம் பெற்ற சமய மற்றும் ஆன்மீக சமயங்கள்

திருக்குறள்.

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
  1. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
  2. பதினென்கீழ்க்கணக்கு
  3. ஐம்பெருங்காப்பியங்கள்
  4. ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.
அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Note-"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

என் காதலின் உணர்வு......

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
                                                                                  நன்றி கவிப் பேரரசு வைரமுத்து...........

முதன் முதலாய் அம்மாவுக்கு.......

 
நீதானே அம்மா!
அன்பை
எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!

என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!

பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!


சில நாட்கள்
நீ ஊரில் இல்லாவிட்டால்!
உருமாறிப்போகும் நம் வீட்டை!
என்றும் அழகுபடுத்துபவள்
நீதானே அம்மா!

உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!

என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!

என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!

சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!

அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!

சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!

"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!

இன்னும் பல
ஜென்மங்கள் இருக்குமென்றால்!
அதிலும் நீயே என் தாயாக
வேண்டுமென! கேட்டு! கடவுளிடம்
தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா!
இந்த ஜென்மத்தில்!
நான் பெற்ற நன்மைகள்!
வரும் ஜென்மங்களில்
இன்னும் சிலருக்கு !
கிடைக்கட்டும் அம்மா